Skip to main content

குத்துப்பட்ட நடிகை... கங்கனாவிடம் வேண்டுகோள்! 

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

malvi

 

‘குமாரி 18 ப்ளஸ்' என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில், 'ஹோட்டல் மாலினி' என்றொரு படத்தில் நடித்துள்ளார். 

 

இந்நிலையில், சினிமா தயாரிப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர்.

 

இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார், நடிகை மால்வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நடிகை மால்வி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் யோகேஷ் குமாரிடம் பேச்சுவார்தையும் குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் யோகேஷ், நடிகை மால்வி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், மும்பையில் உள்ள ஒரு கஃபேயில் இருந்து காரில் வீட்டுக்குச் செல்லும்போது, நான்கு முறை கத்தியால் அவரைக் குத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

 

இதில் காயமடைந்த மால்வி, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மால்வி பேசுகையில், “தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோருகிறேன். நானும் மாண்டி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதால் கங்கணா ரணாவத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

 

மும்பை நகரில் எனக்கு நடந்த இந்தச் சம்பவத்தை நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனவே அநீதிக்கு எதிரான எனது போராட்டத்தில் இவர்களின் ஆதரவு வேண்டும்" என்றார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

சர்ச்சையான பேச்சு - ஆதாரத்தை வெளியிட்ட கங்கனா

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
kangana ranaut explained subhas chandra bose issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நிலையில் இந்தியாவின் முதல் பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது, “எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.  

1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றிருந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் என கங்கனா கூறியிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி கங்கனாவை ஆதரித்து பா.ஜ.கவினரும் எதிராக காங்கிரஸை சார்ந்தவர்களும் மாறி மாறி கருத்து பகிர்ந்து வந்தனர். 

இந்த நிலையில் இந்த சர்சைக்கு ஆதாரமாக ஒரு பிரபல ஊடகத்தின் செய்தி குறிப்பை பகிர்ந்துள்ளார் கங்கனா. அந்த செய்தி குறிப்பில், “நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர், அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் (சுதந்திர இந்தியா) என்ற அரசை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது சுபாஷ் சந்திர போஸ் தன்னைப் பிரதமர், மாநிலத் தலைவர் மற்றும் போர் அமைச்சராக அறிவித்தார்.

மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதன். இந்திய தேசிய ராணுவத்திற்காக போராடும் பெண் வீரர்களின் படையான ராணி ஜான்சி படைப்பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கினார். ராணி ஜான்சி படைப்பிரிவு ஆசியாவிலேயே முதல் பெண்கள் மட்டும் போர் படைப்பிரிவு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.