
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் கமலுக்கு தாத்தாவாக நடித்த பழம்பெரும் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நேற்று (20.01.2021) காலமானார். அவருக்கு வயது 98. சமீபத்தில் கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட அவர் சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த நிலையில், நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். நிமோனியா காய்ச்சல் காரணமாக மூன்று வாரங்களுக்கு முன் கண்ணூர் மருத்துவமனையில் உன்னிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நிமோனியா காய்ச்சலில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.
இதையடுத்து அவருக்கு இரண்டு நாட்களில் மீண்டும் காய்ச்சல் வந்ததையடுத்து அவருக்கு கரோனா தோற்று இருப்பது உறுதியானது. பின்னர் மீண்டும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செய்த பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)