Skip to main content

விஜய்யுடன் இணைந்த ரஜினி பட நடிகை....

Published on 02/10/2019 | Edited on 03/10/2019

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்திருக்கிறார்.இது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
 

malavika mohanan

 

 

இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது. 
 
தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். 
 
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 3ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு மாலை ஐந்து மணிக்கு தளபதி 64 படத்திலிருந்து அப்டேட் விட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

336


அதில் முதள் நாள் அப்டேட்டில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்று வெளியானது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று வந்த அப்டேட்டில், அங்காமலி டைரீஸ் படத்தில் ஹீரோவாக நடித்த ஆண்டனி வர்கீஸும் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு அப்டேட்கள் விட இருக்கிறோம். அதில் முதல் அப்டேட்டாக சாந்தனுவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளது படக்குழு. மேலும் ஒரு அறிவிப்பில் மாளவிகா மோஹனனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அப்டேட்விட்டுள்ளது படக்குழு. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோசமான நடவடிக்கை” - மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
malavika mohanan recent post

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி படங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து பிசியாக நடித்து வரும் மாளவிகா, சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார். படங்களின் அப்டேட், புது ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், ஆகியவற்றை தாண்டி அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் தனது கருத்தை முன்வைப்பார். 

இந்த நிலையில் ஒரு தனியார் விமான நிறுவனம் ஒன்றை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜெய்ப்பூரில் முரட்டுத்தனமாகவும் மோசமான சேவையாகவும் இருந்தது. பணியாளர் நடவடிக்கையும் மோசமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மாளவிகா மோகனன் பிறந்தநாளுக்கு தங்கலான் படக்குழு சர்ப்ரைஸ்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

thangalaan malavika mohanan poster

 

ரஜினியின் 'பேட்ட' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் 'மாஸ்டர்' படம் மூலம் பிரபலமானார். பின்பு தனுஷுடன் 'மாறன்' படத்தில் நடித்ததையடுத்து, தற்போது விக்ரமின் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துள்ளது. 

 

இன்று மாளவிகா மோகனன், தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு சார்பில் மாளவிகா மோகனனுக்கு வாழ்த்து போஸ்டர் ஒன்றை பா.ரஞ்சித் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளார். மேலும் 'ஆரத்தி' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த போஸ்டர் தற்போது மாளவிகா மோகனன் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.