Skip to main content

"பார்ப்பவர்களை வாயடைக்க செய்யும்" - மாதவன் படம் குறித்து மத்திய அமைச்சர் கருத்து

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

"Makes viewers speechless" - Union Minister comments on Madhavan film

 

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் மே 17-ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரையிடப்பட்டுள்ளது. இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

 

இந்நிலையில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், " ராக்கெட்ரி - நம்பி விளைவு படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்தேன். இந்திய சினிமாவின் ஒரு புதிய குரலாக ஒலித்த மாதவனுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். 

 

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் இப்படத்தை பார்த்து தன் கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ராக்கெட்ரி, இந்த படம் நிச்சயமாக பார்ப்பவர்களை வாயடைக்க செய்யும் . கட்டாயமாக உலகம் பார்க்க வேண்டிய கதை. கதையின் ஆன்மாவை படம்பிடித்து அதை உலகத்துடன் பகிர்ந்த மாதவனுக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். இப்படம் தமிழ் , இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் ஜூலை 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


  

 


 

சார்ந்த செய்திகள்