மலையாளத்தில் துல்கர் சல்மான் - பார்வதி ஆகியோர் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் சார்லி.
மலையாளத்தில் வெற்றிபெற்ற இப்படம் மாறா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. துல்கர் சல்மான் நடித்த பாத்திரத்தில் மாதவனும், பார்வதி நடித்த பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தது குறிப்பிடதக்கது. புதுமுக இயக்குனர் திலீப் குமார் இயக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
"Yaar Azhaippadhu" - First single from #Maara out now on all your favourite streaming platforms..https://t.co/Co2pQYCu43@thinkmusicindia@Kavithamarai@sidsriram@ActorMadhavan@ShraddhaSrinath@dhilip2488@ShrutiNallappa@pramodfilmsnew@DesiboboPrateek@thespcinemaspic.twitter.com/qADs8X4Dl3
— Ghibran (@GhibranOfficial) October 28, 2020
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் டிசம்பர் 17 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்திலிருந்து "யார் அழைப்பது" என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடலை இப்போது கேட்டதும், படக்குழுவையும்,படப்பிடிப்பையும் மிஸ் செய்வதாக மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.