Skip to main content

சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த 'மாநாடு' பிரபலம்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

maanaadu editor kl praveen joins pathu thala movie

 

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'பத்து தல' படத்திற்கு எடிட்டர் பிரவீன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மாநாடு' படத்தில் எடிட்டராகப் பணியாற்றிருந்தார். இப்படத்தில் இவரின் பணி பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியேறும் டாப் நடிகர் - உள்ளே வரும் சிம்பு; கமல் படத்தில் மாற்றம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
simbu will replace dulquer salman in thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லபபடுகிறது. மெலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவருக்கு பதில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தக் லைஃப் படத்திலும் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ரீ ரிலீஸில் சாதனை படைத்த விண்ணைத் தாண்டி வருவாயா

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
vinnaithaandi varuvaaya movie create record in re release

திரையரங்குகளில் மறு வெளியீடு செய்து அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' (DDLJ) இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது..

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், சிம்பு மற்றும் திரிஷா நடித்த இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் கடந்த நிலையில் இதனை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்..

மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இத்திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்றளயும் இத்திரைப்படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.