/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/222_41.jpg)
கமலின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தின் டீசர் கடந்த 21ஆம் தேதி வெளியானது.
டீசரில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் இருக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றது. இந்த டீசர் சமூக வலைதளங்கலில் வைரலானது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி, “உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு. இது என்னமா” என லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த ஆல்பம் பாடல் வருகிற 25ஆம் தேதி ராஜ்கமல் யூட்யூப் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் அதனை புரோமொஷன் செய்யும் விதமாக ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் இறங்கியுள்ளனர். நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2024 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டமான சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணி போட்டியை இருவரும் ஸ்டேடியத்தின் உள் இருந்து கண்டு களித்தனர். இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசரில் இடம்பெற்ற காட்சிகள் வைரலான நிலையில் தற்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)