Skip to main content

அடுத்த படம்... லோகேஷ் கனகராஜ் ட்வீட்!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

lokesh kanakaraj

 

'பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள அடுத்த படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தை 'மாநகரம்', 'கைதி' உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

 

அனிருத் இசையமைக்க, விஜய்யுடன் விஜய்சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்த 'மாஸ்டர்' திரைப்படம் கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்படும் வரை, 'மாஸ்டர்' படத்தை எந்தவொரு ஓ.டி.டி.யிலும் வெளியிடப்போவதில்லை என்று படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படம் குறித்தான அறிவிப்பை, நாளை மாலை ஆறு மணிக்கு வெளியிடுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல் தயாரிப்பில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
lokesh kanagaraj introduced as actor in kamal production inimel album song

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். 

இதைத் தவிர்த்து பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் முதலில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தெலுங்கில் அதிவி சேஷ் நடிக்கும் டகோயிட் (Dacoit) படத்தில் நடிக்கிறார். ஷேன்யில் டியோ இயக்கும் இப்படத்தை சுப்ரியா யர்லகடா தயாரிக்க பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. 

lokesh kanagaraj introduced as actor in kamal production inimel album song

இதையடுத்து  ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வேலு நாச்சியார் பையோ பிக் உருவாகுவதாகவும் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. இதனிடையே கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது . அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. 

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் ஆல்பம் பற்றிய தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் இசையமைக்க கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ள இந்த ஆல்பம் பாடலில் இதில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குறும்படம் டூ எல்.சி.யு - ப்ளடி ஸ்வீட் லோகேஷ் கனகராஜ்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
lokesh kanagaraj birthday special

குறுகிய காலத்தில் உச்ச நடிகர்களை இயக்கி அதை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். எந்த இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் குறும்படம் மூலம் இயக்கத்தைக் கற்று கொண்டு, அதன் அனுபவத்தை வைத்து முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கியிருந்தார். ஹைப்பர் லிங்க் திரைக்கதையில் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் பலரது கவனத்தை பெற்றது. இப்படம் இந்தியில் மும்பைக்கார் என்ற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியானதும் அதில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே அவர் இயக்கிய ‘களம்’ குறும்படம் ஆந்தாலஜி ஜானரில் 2016அம் ஆண்டு வெளியான அவியல் படத்தில் ஒரு பங்காக இடம்பெற்றது நினைவுகூரத்தக்கது.  

lokesh kanagaraj birthday special

இதையடுத்து பெரிய ஹீரோவான கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்திருந்தார். இதில் கதாநாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் கதையை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த எமோஷனல் ட்ராமாவாக எடுத்திருந்தார். பாடல்கள் இல்லை என்ற குறையை படத்தின் இரண்டாம் பாதியில் 90-களில் வெளியான பாடல்களை பயன்படுத்தி தீர்த்திருப்பார். அது ரசிகர்கள் மத்தியில் அதிரி புதிரி ஹிட்டடிக்க, பின் நாட்களில் அதையே தனது அடுத்தடுத்த படங்களில் பின் பற்றினார். அதுவே பின்பு ட்ரெண்டாக மாறியது. இதன் நீட்சியாக சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குணா பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடல் இடம்பெற்ற காட்சி சிலாகித்து பேசும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. ரெட்ரோ பாடல்களை இப்போது வெளியாகும் படத்தில் பயன்படுத்துவது ஒரு வெற்றி ஃபார்முலா போல் பார்க்கப்படுகிறது. கைதி படமும் இந்தியில் போலா என்ற தலைப்பில் ரீமேக்கானது. அஜய் தேவ்கன் இயக்கி நடித்திருந்தார்.  

lokesh kanagaraj birthday special

இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக உச்ச நடிகரான விஜய்யை வைத்து. மாஸ்டர் என்ற தலைப்பில் உருவான இப்படம் கொரோனா சிக்கலால் சற்று தாமதமாகவே வெளியானது. இதிலும் 50 சதவீதம் என்னுடைய ஸ்டைல் மற்றும் 50 சதவீதம் விஜய்யின் ஸ்டைல் என்ற பிராண்டோடு வந்தது. விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம், அதிக வன்முறை என கலவையான விமர்சனத்தை பெற்றாலும், கொரோனாவுக்கு பிறகு ரிலீசாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

lokesh kanagaraj birthday special

இதையடுத்து அவரது ஃபேவரிட் கதாநாயகரான கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் என்ற தலைப்பில் கமல்ஹாசனே 1986ல் படம் நடித்த நிலையில் அதே தலைப்பில் ஃபேன் பாய் படமாக இப்படத்தை இயக்கினார். வழக்கமாக அவரது ஸ்டைலான ஆக்‌ஷன் கலந்து, ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தி படம் உருவாகியிருந்தாலும் பழைய விக்ரம் படத்தின் கனெக்ட், அந்த படத்தையும் கைதி படத்தின் கதாபாத்திரத்தின் கதைக்களத்தை மற்றும் கதாபாத்திரங்களை வைத்து ஒரு யூனிவர்ஸ் உருவாக்கியது, ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. இதன் பின்பு ரசிகர்கள் அந்த முயற்சியை எல்.சி.யு (லோகேஷ் சினிமெட்டிக் யூனிவர்ஸ்) என அழைத்து வருகின்றனர். இந்த தாக்கம் மற்ற படங்களிலும் எதிரொலித்தது. 

lokesh kanagaraj birthday special

இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் கூட்டணி, அனிருத் இசை என பெரிய எதிர்பார்ப்புடன் லியோ படம் உருவாகி வந்த நிலையில் இப்படம் எல்.சி.யூ-வில் வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது. அந்த சஸ்பென்ஸை பட வெளியீட்டிற்கு முன்பு வரை காத்த படக்குழு, படத்தின் சின்ன கனெக்ட் மூலம் யுனிவர்ஸில் இணைத்து முடித்திருந்தது. இப்படம் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யின் அரசியல் முடிவால் இதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 

lokesh kanagaraj birthday special

தொடர்ந்து தனது சினிமா கிராஃபை உயர்த்திக் கொண்டு வந்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கைகோர்த்துள்ள நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ள அவர், அதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார். ஏப்ரலில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரகளான ரஜினி, கமல், விஜய் என அடுத்தடுத்து பயணித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். .