/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/211_17.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர்.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் ‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். அந்நிறுவனத்தின் முதல் படமாக உறியடி படம் மூலம் பிரபலமான விஜய்குமார் நடிக்கும் படத்தை தயாரிப்பதாக தெரிவித்திருந்தார். பின்பு அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘ஃபைட் கிளப்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அப்பாஸ் ஆர் அஹ்மத் இயக்கியுள்ளார். கோவிந்த்வசந்தா இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் படப்படிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. இப்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பொஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது நிறுவனத்தின் முதல் படமாக வழங்குகிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சண்டையை மையப்படுத்தி காதல், காமெடி மற்றும் ஆக்ஷன் அதிகம் கலந்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் டீசரில் இளையராஜா இசையமைத்த ‘என் ஜோடி மஞ்ச குருவி...’ பாடலின் இசை, பேண்டு வாத்தியத்தில் வருகிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியுள்ள படங்களில் ரெட்ரோ பாடல்களை வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தனது நிறுவனத்தின் மூலம் முதல் படமாக வெளியிடும் இந்த படத்திலும் அந்த செண்டிமெண்ட் தொடர்கிறது. ஏற்கனவே இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவித்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)