lokesh kanagaraj introduced as actor in kamal production inimel album song

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

Advertisment

இதைத் தவிர்த்து பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் முதலில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகிபின்பு விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும் தெலுங்கில் அதிவி சேஷ் நடிக்கும் டகோயிட் (Dacoit) படத்தில் நடிக்கிறார். ஷேன்யில் டியோ இயக்கும் இப்படத்தை சுப்ரியா யர்லகடா தயாரிக்க பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

lokesh kanagaraj introduced as actor in kamal production inimel album song

இதையடுத்து ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வேலு நாச்சியார் பையோ பிக் உருவாகுவதாகவும் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. இதனிடையே கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது . அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது.

Advertisment

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் ஆல்பம் பற்றிய தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் இசையமைக்க கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ள இந்த ஆல்பம் பாடலில் இதில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.