kavin

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடுவிநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளரும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளருமான ரவீந்திரன் சந்திரசேகரன் கைப்பற்றியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், ‘லிஃப்ட்’ படத்தின் தமிழ்நாடு உரிமையைக் கைவசம் வைத்துள்ள லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கும் தயாரிப்பு நிறுவனமான ஈகா என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டனர். இந்த விவாகரம் தொடர்பாக இருதரப்பும் அமர்ந்து பேசி சுமுகத் தீர்வை எட்டுவார்கள் என கவின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்பதைத்தான் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய ட்விட்டர் பதிவு காட்டுகிறது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கவினுக்காகவும் கவின் ரசிகர்களுக்காகவும் நான் கொடுத்த முன்பணத்தின் அசல் தொகையைத் திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என இறங்கிவந்தபோதிலும் ஈகா என்டர்டெயின்மெண்ட் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அந்தப் பணத்தை என்னுடைய முதலீட்டாளருக்கு என்னால் திரும்பசெலுத்த முடியாததால் என்னிடம் உள்ள தமிழக விநியோக உரிமையை என்னுடைய முதலீட்டாளருக்கு வழங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘லிஃப்ட்’ படத்தின் வெளியீட்டில் நீடிக்கும் இந்த சர்ச்சை, படத்தின் வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தும் என்பதால் கவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.