/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_90.jpg)
பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது. இப்படம் வருகிற ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மதுவிற்கு அடிமையான ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் அமீர், வெற்றிமாறன், மிஸ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இதில் மிஸ்கின் பேசுகையில் முகம் சுழிக்கும் வகையிலும் மதுவை ஆதரிக்கும் வகையிலும் சில விஷயங்கள் பேசியிருந்தார். இது அந்த நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்பு அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழுந்தது.
இந்த நிலையில் இயக்குநர் லெனின் பாரதி மிஸ்கின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில், “பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டில் பெண்கள் பற்றி தட்டையான பொதுபுத்தியில் மிஷ்கின் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்து போன பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட மேடையிலிருந்த அத்தனை படைப்பாளர்களுக்கும் எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்” என்றார்.
பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டில் பெண்கள் பற்றி தட்டையான பொதுபுத்தியில் #மிஷ்கின் அவர்கள் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்துபோன @beemji#அமீர்#வெற்றிமாறன் உள்ளிட்ட மேடையிலிருந்த அத்தனை படைப்பாளர்களுக்கும் எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.. https://t.co/1JGPsCgPNg
— leninbharathi (@leninbharathi1) January 21, 2025
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)