/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/71_30.jpg)
இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள சமூக நையாண்டி வகை திரைப்படமாகும். மனிதநேய உணர்வுகளையும், நகைச்சுவையையும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகேசன், ரம்யா பாண்டியன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சீரா... சீரா...' என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது 'லல்லாரியோ... லல்லாரியோ...' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் யூடியூப் தளத்தில் 9.3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது படக்குழுவினருக்கு புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)