Skip to main content

'உனக்கு 46 எனக்கு 56' - பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் மாஜி ஐ.பி.எல் தலைவர்

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Lalit Kumar Modi and actress sushmita sen are in relationship now


 

லலித் மோடி (56), இந்தியாவில் மிக பிரபலமான இந்தியன் ப்ரீமியர் லீக் அமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்து வந்தவர். இதனிடையே பெருமளவு வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை சி.பி.ஐ. அவர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. பின்பு இந்தியாவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வாழ்ந்து வருகிறார் . இந்நிலையில்  முன்னாள் உலக அழகி மற்றும் பிரபல நடிகையான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

 

1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடல் அழகனான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார். பிறகு கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர், தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

 

இந்நிலையில் லலித் மோடியும் சுஷ்மிதா சென்னும் டேட்டிங் உறவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் லலித் மோடி. மேலும் அந்த ட்விட்டர் பதிவில், "மாலத்தீவு, சார்தானியா உள்ளிட்ட பல இடங்களுக்கு உலக சுற்றுலா சென்றுவிட்டு இப்போதுதான் லண்டனுக்கு திரும்பியுள்ளோம். ஒருவழியாக புது வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அதுவும் நடக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ஐ.பி.எல். இறுதிப் போட்டி; வெளியான முக்கிய தகவல்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
IPL Finals; Important information released

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சென்னையில் கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.