lakshmi ramakrishnan about his upcoming movie Are you ok Baby?

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது இயக்கி தயாரித்திருக்கும் படம் 'ஆர் யூ ஓகே பேபி?’. இப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருக்க முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். முதல் முறையாக லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Advertisment

இப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், "இப்படத்தின் கதை சொல்லப்படவேண்டிய ஒன்று. இப்படத்தின் தலைப்பு, குழந்தையை மையப்படுத்தி அமைந்துள்ளதால் அக்குழந்தைக்கு அது ஓகே வா என்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என வைத்தோம். மேலும் விஜய் சேதுபதி ஒரு படத்தில் பேசும் 'ஆர் யூ ஓகே பேபி...' என்ற வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த தலைப்பை தேர்ந்தெடுக்க ஒரு காரணம். மிஷ்கின் என்னுடைய நண்பர். அவரிடம் கேட்டபோது ஒரே ஒரு ஃபோன் கால் தான் பண்ணேன். எங்க வரணும், எப்ப வரணும் என்று மட்டும் தான் கேட்டார்.

Advertisment

இந்த படத்தை இளையராஜாவின் இசை வேறொரு தளத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. படத்தில் ஒரு பாடல் தான் இருக்கு. அதை அவரே எழுதியுள்ளார். இப்படம் சமுகத்துக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும்.நான் நடத்திய டாக் ஷோவின் பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறேன்" என்றார்.