Skip to main content

சென்னையின் பின்புல குற்றவாளிகளைத் தோலுரிக்கும் 'குருதிக்களம்'

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

fdfasf

 

எம்எக்ஸ் பிளேயரில் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் ‘குருதிக்களம்’ இணைய தொடரின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் உள்ள குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுப்பூர்வமான இந்தத் தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்தத் தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல் வரும் ஜனவரி 22ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. பரபரப்பான இந்த இணைய தொடரில் நடிகர் மாரிமுத்து, வின்செண்ட் அசோகன், ஶ்ரீகாந்த், சனம் ஷெட்டி, ஈடன் குரியகோஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

 

“உன்னால் உன் விதியைத் தேர்ந்தெடுக்க முடியும், ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது“ இது இரண்டு இளைஞர்களின் கதை, வாழ்வின் தொடக்கத்தில் சரியான பாதையில் ஒன்றாக ஆரம்பித்த அவர்கள், இறுதியில் விதிக்கும், கடமைக்குமான இரத்தக்களரியான போரில், அவர்கள் கொடுக்கும் விலை என்ன என்பதே இதன் கதை. ஆக்சன் மற்றும் க்ரைம் கதையமைப்புடன் உருவாகியுள்ள இத்தொடர் பொழுதுபோக்கிற்கான சிறந்த தொடராக இருக்கும். Applause Entertainment மற்றும்  Arpad Cine Factory இணைந்து தயாரித்துள்ள ‘குருதிக்களம்’ தொடரை தனுஷ், கே.மோகன், விக்னேஷ் கார்த்திக், கிஷோர் சங்கர் மற்றும் கவிராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 13 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரை ராஜ பாண்டி மற்றும் தனுஷ் ஆகிய இருவர் இயக்கியுள்ளனர். இந்த தொடர் MX Player-ல் ஜனவரி 22 வெளியாகவுள்ளது. மேலும் இத்தொடர் குறித்து இயக்குநர் ராஜபாண்டி கூறும்போது...

 

"குற்றங்களை அடிப்படையாக கொண்ட கதைகள் தற்போதைய காலத்தில் ரசிகர்கள் அதிகம் விரும்புபவையாக இருக்கின்றன. இந்த இணைய தொடர் துரோகம், பழிவாங்கல் மற்றும் தியாகம் செய்தலுக்கு இடையிலான பெரும் உணர்வுகளைப் பொழுதுபோக்கு அம்சத்துடன் கலந்து சொல்லும் வகையில் ரசிகர்கள் விரும்பும்படி இருக்கும்.” மேலும் இயக்குனர் தனுஷ் கூறும்போது.... "தொடர் பார்வையில் அனைத்து அத்தியாயங்களையும் பார்க்கும் ஆர்வத்தைத் தரும் வகையில் இந்தத் தொடர் உள்ளது. மிக அழகாக அத்தனை ஆக்சன் மற்றும் உணர்வுகளை அட்டகாசமாக 13 அத்தியாயங்களுக்குள் தந்திருக்கும் நடிகர் குழு மற்றும் தொழில்நுட்பக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்