Skip to main content

''அவர்களுடன் வேலை செய்வது நன்றாக இருக்கிறது. ஏனென்றால்...'' - கே.எஸ்.ரவிக்குமார் 

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ள படம் “கோமாளி”. ஜெயம் ரவி - காஜல் அகர்வால் கூட்டணியில் உருவான இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

 

ks

 

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியபோது... "இந்தப்படத்தை வெற்றி படமாக்கியதில் முக்கிய பங்கு பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு. நான் சமீபமாக வெளி மாநில படங்கள் இயக்கிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் விளம்பர படம் ஒன்றும் செய்தேன். அதைத் தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் நிறைய வந்தது. எல்லாமே புதுமுக இயக்குநர்கள் தான். அவர்கள் புதிது புதிதான ஐடியாக்காளோடு வருகிறார்கள். அவர்களுடன் வேலை செய்வது நன்றாக இருக்கிறது. ஜெயம் ரவி இன்னும் புதிய இளைஞன் போல் உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஈகோ இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் இன்னும் உயரங்கள் அடைய வேண்டும். இந்த வெற்றிப்படத்தில் என்னை பங்குபெறச் செய்ததற்கு நன்றி" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சாமானியனுக்காக நடிக்க ஒப்புக்கொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

A famous director who agreed to act for the saamaniyan

 

தம்பிக்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராகேஷ்; நீண்ட நாட்களாக திரையில் முகம் காண்பிக்காமல் இருந்த பல வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த நாயகன் ராமராஜனை வைத்து சாமானியன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவர் சாமானியன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாமானியன் படத்தில் நட்புக்காக நடிக்க ஒத்துக்கொண்ட உயர் மதிப்பிற்குரிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்று இயக்குநர் ராகேஷ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

'நல்ல வழி சொன்ன கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி. இருந்தும் அவர்...' - பேரரசு 

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019-2021 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு இயக்குனர் சங்கம் குறித்து பேசியபோது....

 

perarasu

 

 

''இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதை விட, தேர்தல் நடத்தியதைதான் நான் பெரிய வெற்றியாக பார்க்கிறேன். பெரிய கட்சிகளுக்கு எப்படி ஏகமானதான தலைவராக எப்போதும் அண்ணா இருக்கிறாரோ, அதுபோல் இயக்குனர் சங்கத்தின் ஏகமனதான தலைவர் இயக்குனர் விக்ரமன் தான். அதில் எந்த மாற்று கருதும் இல்லை. சங்க வருமானத்திற்கு வழி சொன்ன கே.எஸ்.ரவிக்குமாருக்கு  பெரிய நன்றி. இந்த நல்ல வழியை கடைபிடிப்போம். அதேசமயம் நம் சங்க உறுப்பினர்கள் மற்ற மொழியில் படங்கள் இயக்கினாலும் சங்கத்திற்கு 1 லட்ச ருபாய் கொடுக்கவேண்டும் என புதிய வேண்டுகோள் வைத்துக்கொள்கிறேன்'' என்றார்.