Skip to main content

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல், ஸ்வீட் பிரியாணி திரையிடத் தேர்வு!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

koozhangal, Sweet Biryani movie to be screened at Goa International Film Festival

 

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளனர் . அறிமுக இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதலில் வேறு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த கூழாங்கல் திரைப்படம் பிறகு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கியுள்ள இப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் ரேஸிலும் இடம்பிடித்துள்ளது. 

 

இந்நிலையில் 'கூழாங்கல்' திரைப்படம் கோவாவில் வரும் 20 தேதி நடைபெறவுள்ள சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இப்படத்தை போலவே இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் வெளியான 'ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.  இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கிருந்த டூ லேட் குறும்படமும் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. உணவு டெலிவரி செய்பவரின்  ஒரு நாளை மையமாக வைத்து 'ஸ்வீட் பிரியாணி' குறும்படம் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றதோடு பல விருதுகளையும் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேசத் திரைப்பட விழா - ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிராக போரட்டம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

protest against  The Kerala Story screening in iffi

 

54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல மொழி படங்கள் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டது. அந்த வகையில் சுதிப்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீநாத், மற்றும் ஓவியர் அர்ச்சனா ஆகியோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். மேலும் படத்தை கேலி செய்யும் மீம்ஸ் மற்றும் படத்தில் கூறப்பட்ட பல விஷயங்களை மறுக்கும் தரவுகள் அடங்கிய ஆவணங்களையும் கையில் வைத்திருந்தனர்.

 

அதோடு இயக்குநர் சுதிப்தோ சென்னிடம், இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த அவர், “நீங்கள் படம் பார்த்தீர்களா? படம் பார்க்காதவரை அதைப் பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் படத்தைப் பார்த்தால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்”என்றார். இதனால் போரட்டதில் ஈடுபட்ட இருவரையும் பனாஜி போலீஸார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் செல்போன்களையும் அடையாள அட்டையையும் பறிமுதல் செய்து, பின்பு 1 மணி நேரம் கழித்து விடுவித்தனர். 
 

 

 

Next Story

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘கடக் சிங்’ ட்ரைலர்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Kadak Singh Trailer released in goa international film festival

 

54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நேற்று (20.11.2023) பிரம்மாண்டமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதோடு பிலிம் பஜாரையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதனிடையே மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு சினிமாவின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. சத்யஜித்ரே பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸிற்கு வழங்கப்படுகிறது. நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 270க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியன் பனோரமா பிரிவில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. 

 

இந்த நிலையில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’படத்தின் ட்ரைலர் இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கத்தில் பார்வதி திருவோது மற்றும் முன்னணி கதாபத்திரத்தில் சஞ்சனா சாங்கியுடன் பங்களாதேஷி நடிகர், ஜெயா அஹ்சான் நடிகின்றனர். முக்கிய துணை பாத்திரங்களில் பரேஷ் பாஹூஜா மற்றும் வருண் புத்ததேவ் ஆகியோர் நடிக்கின்றனர். ஓபஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து ஒரு விஸ் ஃபிலிம்ஸ் மற்றும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த திரைப்படம் 8 டிசம்பர் 2023 அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. .