Kolai Motion Poster released

Advertisment

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் கொலை படத்தில் நடித்து வருகிறார். இவருடன் ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமான முறையில் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அந்த மோஷன் போஸ்டரில் லீலாவை யார் கொன்றது என்ற கேள்வியும் இடம் பெற்றுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் ஒரு கொலையை சுற்றி நகரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.