to kill a tiger in oscar naomination 2024

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப்பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் பல்வேறு நாட்டினர்தங்களது திரைப்படங்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில் 2024 ஆண்டு ஆஸ்கர் விருதில், இந்தியாவிலிருந்து மலையாள படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால் இப்படம் இறுதி பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயேவெளியேறியது.

Advertisment

இந்த நிலையில் 2024, 96வது ஆஸ்கர் விருது போட்டியில் இறுதி செய்யப்பட்ட பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த சர்வதேசத்திரைப்படப் பிரிவில், “ லோ கேபிடனோ (Io Capitano - இத்தாலி), ‘பெர்ஃபெக்ட் டேஸ்’ (Perfect Days - ஜப்பான்), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (Society of the Snow - ஸ்பெயின்), ‘தி டீச்சர்ஸ் லான்ஞ்’ (The Teacher’s Lounge - ஜெர்மனி), ‘ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்’ (The Zone of Interest - லண்டன்) ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

Advertisment

இதனிடையே இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜார்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதி போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டவை ஆகும். இப்படம் 2022 டோரண்டோ சர்வதேசத்திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது. இப்படத்தை இந்தியாவில் பிறந்து, கனடாவில் வசித்து வரும் நிஷா பஹுஜா என்பவர் இயக்கியுள்ளார்.

கடந்த வருட ஆஸ்கர் விழாவில், நீலகிரி முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம், சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த ஆஸ்கர் போட்டியில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிடுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த பின்னணிஇசை, சிறந்த தயாரிப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகள் அடங்கும். அதே சமயம், ‘புவர் திங்க்ஸ்’ படம் 11 பிரிவுகளில், ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்’ 10 பிரிவுகளில், பார்பி 8 பிரிவுகளில் போட்டியிடுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது வருகிற மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது.