The Kerala Story director Sudipto Sen hospitalised

Advertisment

ஆஸ்மா (2018) மற்றும் தி லாஸ்ட் மாங்க் (2006) மற்றும் தி கேரளா ஸ்டோரி (2023) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுதிப்தோசென். சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பெரும்சர்ச்சையை கிளப்பியது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் படத்திற்குதடை விதிக்க வேண்டும் என்றுபோராட்டம்நடந்தது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது ரூ.200 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் சுதிப்தோசென் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருக்கும் இவர் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்போது நலமாக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாகவும்பேசப்படுகிறது.