Skip to main content

"நடிகைக்கு பெரிதளவில் இடம் கிடைப்பது கஷ்டமான விஷயம்" - கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

keerthy suresh speech at maamannan success meet

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர். 

 

இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். 

 

இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ், "இதுபோன்ற பெரிய படத்தில் நடிகைக்கான கதாபாத்திரம் பெரிதளவில் கிடைப்பது ஒரு கஷ்டமான விஷயம். ஆனால் அந்த மாதரி ஒரு பெரிய இடத்தை இப்படத்தில் ஏற்படுத்திக் கொடுத்த மாரி செல்வராஜுக்கு நன்றி. இதுபோன்று நிறைய நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கணும். இனி வரும் இயக்குநர்களுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை” - அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
keerthy suresh raghu thatha release update

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் ரகு தாத்தா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் ரகு தாத்தா படத்தை சுமன் குமார் இயக்கியுள்ள நிலையில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே நிறுவனத்தின் முதல் தமிழ் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் கிளிம்ஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. இரண்டாவது கிளிம்ப்ஸ் கடந்த ஜனவரியில் வெளியானது. பின்பு சில தினங்கள் கழித்து டீசர் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. 

இப்பட அறிவிப்பின் போதே, தைரியமிக்க ஒரு பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தை நகைச்சுவை கலந்து ஒரு குடும்ப படமாக உருவாக்கவுள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி டீசரில், கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் வரும் கீர்த்தி சுரேஷ், இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் காட்சிகள், தனது வேலையில் ப்ரோமோஷனை தவிர்க்கும் காட்சிகள், மக்களை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. டீசரில் விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு குறிப்பிட்டிருந்தது. 

keerthy suresh raghu thatha release update

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 15ஆம் தேதி இபப்டம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அந்தப் போஸ்டரை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களைக் கவர வருகிறது! உங்களை சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும், நெகிழவைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

பாலிவுட்டில் ரீமேக்காகிறது பரியேறும் பெருமாள்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
pariyerum perumal hindi remake update

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 இல் வெளியான படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு எனப் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சாதி பிரச்சணையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டையும் பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாக சித்தார்த் சதுர்வேதி, த்ரிப்தி இம்ரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தடக் 2 என்ற தலைப்பில் உருவாக இப்படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது. இதன் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தத் தலைப்பின் முதல் பாகமான தடக் படம், சாய்ராத் என்ற மராத்தி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வெளியானது. நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தப் படம் ஆணவக் கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியிருந்தது. இந்தப் படமும் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.