keerthy suresh new film Kannivedi pooja happened today

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்கான 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 11-ல் வெளியாகிறது.

Advertisment

தமிழில் ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தில் கதாநாயகியாகவும் 'கே.ஜி.எஃப்' படத்தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃப்லிம்ஸ் தமிழில் தயாரிக்கும் முதல் படமான 'ரகு தாத்தா' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். மேலும் சந்துரு இயக்கும் படத்திலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கணேஷ் ராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு 'கண்ணிவெடி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜே ரக்‌ஷன், நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.