Skip to main content

ஆஸ்கருக்குப் பரிந்துரை - படக் குழுவிற்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து...

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

jallikatu

 

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. 'மாவோயிஸ்ட்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

 

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இப்படம், ஆஸ்கர் விருதுக்கு, இந்தியா சார்பில்  அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடக்கவுள்ள ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த சர்வதேசப் படத்திற்கான விருதிற்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், 'ஜல்லிக்கட்டு' படக்குழுவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், "ஜல்லிக்கட்டுப் படத்தின் மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்களின் ஆஸ்கர் பயணத்திற்கு வாழ்த்துகள்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

‘சார்மிங்கிலிருந்து சால்ட் அண்ட் பெப்பர்’ - ஜெயம் ரவிக்கு வெளிச்சம் தந்ததா? - ‘சைரன்’ விமர்சனம்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
jayam ravi siren tamil movie review

எப்பொழுதும் சார்மிங்கான ஹீரோவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, இந்த முறை சால்ட் அன் பெப்பர் லுக்கில் வயதான கதாபாத்திரத்தில் களம் இறங்கியிருக்கும் படம் சைரன். கெட்டப் மாற்றி தன் தோற்றத்தை புதியதாகக் காட்டி இருக்கும் ஜெயம் ரவி, இந்த படத்தையும் அதேபோல் புதியதாகக் காட்டியிருக்கிறார்களா? இல்லையா?

செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலிலேயே இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயம் ரவி, பரோலில் தன் 12 வயது மகளைப் பார்க்க வெளியே வருகிறார். அவர் வெளியே வந்த நேரத்தில் யார் யார் மூலம், குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு சென்றாரோ அவர்கள் எல்லாம் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷின் சந்தேக பார்வை ஜெயம் ரவி மீது திரும்புகிறது. எப்பொழுதும் ஷாடோ போலீஸுடன் இருக்கும் ஜெயம் ரவி இந்த கொலைகளை செய்தாரா, இல்லையா? ஜெயம் ரவி ஜெயிலுக்குப் போகும் காரணம் என்ன? குற்றம் செய்தவர்களை யார் கொலை செய்தது? என்பதே சைரன் படத்தின் மீதிக் கதை.

jayam ravi siren tamil movie review

ஜெயம் ரவியை வைத்துக்கொண்டு பில்டப்புகள் இல்லாமல் நேராக கதைக்குள் சென்றுவிட்டு அதன்பின் ஸ்டேஜிங்கில் சற்று நேரம் எடுத்துக்கொண்டு போகப் போக ஆக்சிலேட்டர் கொடுத்து படத்தை மித வேகமாக நகர்த்தி கடைசியில் அழுத்தமான காட்சிகளோடு படத்தை முடித்து ஒரு நிறைவான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் ஆண்டனி. கதையிலும் தன் எழுத்திலும் மிக ஆழமான கருத்துக்களைப் படம் மூலமாக தெளித்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கூட வேகத்தைக் கூட்டி இருக்கலாம். ஆங்காங்கே கதைகளை விட்டு வெளியே செல்லாதபடி இருக்கும் வசனங்கள் அதே சமயம் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களையும் உள்ளடக்கி படத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. தேவையில்லாத மாஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் எனக் கண்களை உறுத்தும் அளவிற்கு எதையும் பெரிதாக வைக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை மட்டும் படத்தில் கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் ஆண்டனி.

முந்தைய படங்களைக் காட்டிலும் தன் அனுபவ நடிப்பின் மூலம் முதிர்ச்சியான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் ஜெயம் ரவி. சின்ன சின்ன முக பாவனைகள் அசைவுகள் என அந்த முதிர்ச்சியான கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். எப்பொழுதும் கலகலப்பாக நடிக்கும் ஜெயம் ரவி இந்த படத்தில் சற்றே அடக்கி வாசித்து அதிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். வாய் பேச முடியாத அதே சமயம் காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இன்னொரு நாயகி கீர்த்தி சுரேஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார். தேவையில்லாத எமோஷ்னல்களை முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்தாமல் ஒரிஜினல் போலீஸ் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்களோ அப்படியெல்லாம் எதார்த்தமாக நடந்து கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு வலுக்கூட்டி இருக்கிறார். இவரின் மிடுக்கான தோற்றமும் துடிப்பான வசன உச்சரிப்பும் அந்த கதாபாத்திரத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது.

jayam ravi siren tamil movie review

அரசியல்வாதியாக வரும் அழகம் பெருமாள் தன் அனுபவ நடிப்பு மூலம் கவனம் பெற்றிருக்கிறார். ஜாதி வெறி பிடித்த போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக நியாயம் செய்திருக்கிறார். எரிச்சல் தரும்படியான இவரின் நடிப்பு கைத்தட்டல் பெற்றிருக்கிறது. நகைச்சுவைக்கு பொறுப்பேற்ற யோகி பாபுவின், ஒரே மாதிரியான நடிப்பும் வசன உச்சரிப்பும் இன்னும் எத்தனை படங்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் மட்டும் மெல்லிய புன்னகைகளை வர வைத்து விடுகிறார். வில்லனாக மிரட்ட முயற்சி செய்திருக்கிறார் வில்லன் நடிகர் அஜய். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நடிகர்களும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக ஜெயம் ரவியின் மகளாக நடித்திருக்கும் நடிகை சிறப்பு.

எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவில் திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக கையாண்டு படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். சாம் சி.எஸ் பின்னணி இசை வழக்கம் போல் காதை கிழித்து விடுகிறது. மொத்தமாக இப்படத்தை பார்க்கும் பொழுது, முதல் பாதி மெதுவாக நகர்ந்து ஒரு கொலைக்குப் பின் வேகம் எடுத்து அதன் பின் கிரிப்பிங்கான திரைக்கதை மூலம் நிறைவான திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை சைரன் கொடுக்கத் தவறவில்லை.

சைரன் - சத்தம் அதிகம்; வெளிச்சம் குறைவு!