தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு. இவர் நடிப்பில், கடைசியாக 'சரிலேரு நீக்கெவரு' படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அப்படம், 'இவனுக்குச் சரியான ஆள் இல்லை' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மகேஷ் பாபு அடுத்து நடிக்கும் படமான 'சர்க்காரு வாரி பட்டா' படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இப்படத்தை பரசுராம் பெட்லா இயக்குகிறார். இவர், ஏற்கனவே 'ஆஞ்சநேயலு', 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்க்காரு வாரி பட்டா' படத்தில், மகேஷ் பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சர்க்காரு வாரி பட்டா படத்தின் பூஜை இன்று நடைபெற்றாலும், அடுத்த வருடம் ஜனவரியில் தான் படப்பிடிப்பு தொடங்குமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.