Skip to main content

'பீஸ்ட்' பட துணை நடிகையுடன் கைகோர்த்த கவின்... வைரலாகும் புகைப்படம்

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

kavin

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இது அவரது தயாரிப்பில் உருவாகும் நான்காவது பாடமாகும். 

 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் கூறுகையில், "ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட, நான் எப்போதும் சிறந்த கதைகளுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களின் ரசிகனாகவே இருந்து வருகிறேன். இயக்குநர் கணேஷ் கே பாபு கூறிய இந்த திரைப்படத்தின் திரைக்கதை என்னை வெகுவாக கவர்ந்தது. 2கே கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக, கேளிக்கையுடன் கூடிய திரைப்படமாக இப்படம்  இருக்கும். தனது திரைவாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஸ்டார் அந்தஸ்து’ பெற்றிருக்கும் நடிகர் கவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள அவரது  கவனம், முயற்சிகள் மற்றும் அவரது அழுத்தமான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு உயிர் கொடுப்பதும் என்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கணேஷ் கதை சொல்லும்போது, கவின் நாயகனின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனத் தோன்றியது. மொத்த படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

காதலியுடன் கை கோர்க்கும் கவின்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

kavin marriage update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கவினுக்கு ஜோடியாக அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. வருகிற 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கரம் பிடிக்கவுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.