'Kathuvakkula Rendu Kadhal' OTT Release Date Announced

Advertisment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. 'சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்' சார்பில் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி தளத்தில் மே 27-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.