Skip to main content

பாலிவுட்டில் ரீமேக்காகிறது பரியேறும் பெருமாள்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
pariyerum perumal hindi remake update

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 இல் வெளியான படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு எனப் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சாதி பிரச்சணையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டையும் பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாக சித்தார்த் சதுர்வேதி, த்ரிப்தி இம்ரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தடக் 2 என்ற தலைப்பில் உருவாக இப்படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது. இதன் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தத் தலைப்பின் முதல் பாகமான தடக் படம், சாய்ராத் என்ற மராத்தி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வெளியானது. நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தப் படம் ஆணவக் கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியிருந்தது. இந்தப் படமும் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்

Next Story

அட்லீயின் இந்தி படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Release date announcement on Atlee's Hindi film

தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார். இதனிடையே ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கிறார்கள். 

காளீஸ் இயக்கும் ‘பேபி ஜான்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிக்கின்றனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் ஆக்சன் ஜானரில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. பேபி ஜானுக்காக உங்களை பிரியப்படுத்துங்கள்’ எனக் குறிப்பிட்டு இந்த படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் வெளிவர இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“அடிக்காதீங்க, அடிக்காதீங்க” - கத்திய கமல் பட நடிகை 

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
raveena tandon car accident issue

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாண்டன். தமிழில் பி.வாசு இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான சாது படத்தில் அறிமுகமாகியிருந்தார். பின்பு கமலுடன் ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார். 

raveena tandon car accident issue

மும்பை ககர் பகுதியில் வசித்து வரும் இவர், மது போதையில் சிலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி இரவு, அவரது வீட்டில் ரவீனா டாண்டனின் டிரைவர், காரை பார்க்கிங் செய்யும் போது, ரிவர்ஸ் எடுக்கையில் அப்பகுதியில் சாலையோரம் வந்த குடும்பத்தினர் மீது மோதியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உடனே அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் அந்த டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த ரவீனா டாண்டன், அந்த குடும்பத்தினருடன் வாதிட்டுள்ளார். பின்பு அவரை அந்த குடும்பத்தினர் சூழ்ந்து கொள்ள, வாக்குவாதம் முற்றி அந்த குடும்பத்தினர் டிரைவரை அடிக்க முயல்கின்றனர். தடுத்த ரவீனா டாண்டன், “அடிக்காதீங்க, அடிக்காதீங்க” என கத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது மூக்கில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிவதாக ஒரு பெண்மணி சொல்கிறார். மேலும் சம்பவத்தின் போது ரவீனா டாண்டன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ரவீனா டாண்டன் மீது புகார் கொடுத்துள்ளனர். இது குறித்த விசாரித்த காவல் துறையினர், ரவீனா டாண்டன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, ரவீனா டாண்டன் கார் யார் மீதும் மோதவில்லை, யாரும் காயமடையவில்லை, அதோடு அவர் மது போதையிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கார் யார் மீதும் மோதவில்லை என்பது பதிவாகியுள்ளது.