hdf

Advertisment

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் நேற்று மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு தன் 'துருவங்கள்' படத்தின் ட்ரைலரை மணிரத்னம் பார்த்த புகைப்படத்தைப் பதிவிட்டு வாழ்த்து கூறினார். அதில்...

''ஜனவரி 16, 2016. ‘துருவங்கள் பதினாரு’ படத்தை வாங்குவோர் யாரும் இல்லை. அப்போது இப்பட ட்ரைலரை அதன் ஆன்லைன் வெளியீட்டிற்கு முன்னதாக மணி சாருக்கு காட்டினேன். அவர், “சுவாரஸ்யமாகத் தெரிகிறது. படம் பார்க்க ஆர்வமாக உள்ளேன். வாழ்த்துகள்" எனக் கூறினார். அவரின் இந்த வார்த்தைகள்தான் என்னை எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பயணிக்கச் செய்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்'' எனக் கூறியுள்ளார்.