/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/499_23.jpg)
ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டானார் கார்த்தி. இதில் நலன் குமாரசாமி படம் கார்த்தியின் 26வது படமாகவும் பிரேம் குமார் படம் 27வது படமாகவும் உருவானது. ஆனால் இதில் பிரேம் குமார் படமான மெய்யழகன் கடந்த செப்டம்பரில் வெளியானது. இருப்பினும் கார்த்தியின் 26வது படம் தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட சர்தார் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் நடிக்க கார்த்தி கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் நலன் குமாரசாமி படம் ‘வா வாத்தியார்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. அதில் போலீஸ் கெட்டப்பில் கார்த்தி இடம் பெற்றிருந்தார்.
இதையடுத்து இப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. சமீபத்தில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரில் இப்படம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு கொண்டாட்ட சூழலில் ஆரம்பிக்கும் டீசர், போலீஸாக வரும் கார்த்தியை உற்சாகத்துடன் மேளதாளத்துடன் மற்ற போலீஸ்கள் வரவேற்கின்றனர். அவர் எம்.ஜிஆர். ரசிகராக இந்தப் படத்தில் நடித்துள்ளது போல் தெரிகிறது. பின்பு படத்தின் க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் காட்சிகள் இடம்பெறுகிறது. எம்.ஜி.ஆர் ரசிகர்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் டீசரின் காட்சிகள் எடுத்துரைக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)