karthi new film with mithran

கார்த்தியின் அடுத்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், ‘ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'சுல்தான்' படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், இதனைத்தொடர்ந்து கார்த்தி, இரும்புத்திரை படத்தின் இயக்குநர் PS.மித்ரனுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment