Skip to main content

 காளை மாட்டுடன் கார்த்தி - பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டர் 

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
karthi Meiyazhagan second poster released

'ஜப்பான்' படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வந்தார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

கார்த்தியின் 27வது படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் சின்னதிரை நடிகை ஸ்வாதி கொண்டே இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.  

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகக் கடந்த பிப்ரவரியில் படக்குழு தெரிவித்தது. இது தொடர்பான வீடியோவையும் அப்போது படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஏற்கெனவே இப்படத்திற்கு மெய்யழகன் எனத் தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் போஸ்டரில் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இடம்பெற்றுள்ளனர். இந்தப் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

karthi Meiyazhagan second poster released

இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை (25.05.2024) கார்த்தியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தப் போஸ்டரைப் படக்குழு பகிர்ந்துள்ளது. இதில் கார்த்தி காளமாட்டோடு இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.  

சார்ந்த செய்திகள்