kanguva movie update

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும், இப்படம் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி சூர்யாவின் 49வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக சூர்யாவின் ரசிகர்களை மகிழ்விக்க கங்குவா படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அன்றைய தினம் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் (பாடல்) வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.