Skip to main content

"உங்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடியது ஒன்று தான்" - கடுப்பான கங்கனா

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

 kangana reacts about she acting with vijay sethupathi

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

 

ad

 

இதனிடையே முன்னாள் விமானப்படை விமானியாக 'தேஜஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் அல்லது தமிழில் பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பில் தமிழில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் மாதவன் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது அடுத்த பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் பிரபலமாக இருக்கும் இரண்டு பிரபலங்கள் இணைவதாக தெரிவித்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருப்பது தெளிவாக இல்லாமல் மறைமுகமாக இருப்பது போல் அமைந்திருந்தது. இதை பார்த்த பலரும் ஹீரோவாக விஜய் சேதுபதியும் ஹீரோயினாக கங்கானாவும் நடிக்கிறார்கள் என பதிவிட்டு வந்தனர். இதே போல் செய்திகளும் வெளியானது. 

 

இந்நிலையில் இந்த செய்திகளுக்கு கங்கனா பதிலளித்துள்ளார். அந்த செய்திகளை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து, "எல்லா நேரங்களிலும் என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, இது போன்ற பயங்கரமான தலைப்புச் செய்திகளுடன், என்னையும் எனது சக நடிகரையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வைரலாகும். உங்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடியது ஒன்று தான்" என குறிப்பிட்டு உங்களுக்கான சிறை எங்கே உள்ளது என்ற அர்த்தத்தில் இந்தியில் ஒரு வரி குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "அதெப்படி எல்லா செய்திகளிலும் ஒரே தலைப்பு இருக்கிறது. இந்த பதிவு உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால், உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

 

விஜய் சேதுபதி, தமிழைத் தாண்டி தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் 'மும்பைக்கார்' படம் கடந்த மாதம் வெளியானது. மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ள ஜவான் படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதியும் கத்ரீனா கைஃப்-க்கு ஜோடியாக நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய சாதனை படைத்த விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Vijay Sethupathi's 'Maharaja' movie set a new box office record!

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம், திரையரங்குகளில் ஓடி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, இப்படத்தில் எடிட்டிங் பணிகளைச் செய்த பிலோமின் ராஜை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்தத் திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி 18 நாட்களைக் கடந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் ரூ.100 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

அட்லீயின் இந்தி படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Release date announcement on Atlee's Hindi film

தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார். இதனிடையே ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கிறார்கள். 

காளீஸ் இயக்கும் ‘பேபி ஜான்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிக்கின்றனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் ஆக்சன் ஜானரில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. பேபி ஜானுக்காக உங்களை பிரியப்படுத்துங்கள்’ எனக் குறிப்பிட்டு இந்த படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் வெளிவர இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.