kangana ranaut

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பல விஷயங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.

Advertisment

அவ்வப்போது ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்திருந்தார் கங்கணா. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரைக் கடுமையாகச் சாடி வந்தனர்.

Advertisment

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் வன்முறையை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் அவருடைய சமூக வலைதளங்களின் கணக்குகள் ஒரு நாள் முடக்கப்பட்டன. இந்நிலையில் ட்விட்டர் மட்டும் ட்ரம்பின் கணக்கையே நீக்கி, அதற்கு விளக்கமும் அளித்தது.

இந்நிலையில் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கனா ரனாவத் ட்வீட் செய்துள்ளார். அதில், “இஸ்லாமிய நாடுகளும், சீனப் பிரச்சாரமும் உங்களை முற்றிலுமாக விலைக்கு வாங்கிவிட்டன. இப்போது நீங்கள் லாபத்தின் பக்கமே நிற்கிறீர்கள். அவர்கள் விரும்புபவற்றைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் சகித்துக் கொள்வதில்லை. உங்கள் சொந்தப் பேராசைகளுக்கு அடிமையாகி விட்டீர்கள்” என்றார்.