Skip to main content

"சாத்தானின் வேதங்கள்... சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்" - கங்கனா வேதனை

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Kangana condemns Salman Rushdie stabbing incident

 

மும்பையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கடந்த 1988 ஆம் ஆண்டு இவர் எழுதிய சாத்தனின் வேதங்கள்(Satanic Verses) என்ற புத்தகம் இஸ்லாமிய நாடுகளில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நூலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் சல்மான் ருஷ்டிக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று ஈரானின் அப்போதைய மன்னரான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற மத ஆணையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளின் தொடர் மிரட்டல் காரணமாக வெளிநாடுகளில் பதுங்கி வாழ்ந்து வந்தார். 

 

ad

 

இதனிடையே  சல்மான் ருஷ்டியின் தலைக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு ஆண்டுகள் கழித்து மேற்கு நியூயார்க்கில் இலக்கிய நிகழ்வில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மர்ம நபரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதற்கு நடிகை கங்கனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், " ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். சாத்தானின் வேதங்கள் அதன் காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும்… நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜூன் மாதத்தைக் குறிவைத்த கங்கனா ரணாவத்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
kangana ranaut Emergency  release date update

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை நடித்து இயக்கியும் உள்ளார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தெரிவித்து ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. பின்பு இப்படம் தள்ளிப் போகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

“பில்கிஸ் பானு வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன்” - கங்கனா

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
kangana about bilkis bano biography

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 11 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களை குஜராத் அரசாங்கம், சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

மேலும் அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது, பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வந்தது. 

இந்த தீர்ப்பை தொடர்ந்து, பில்கிஸ் பானு வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க கங்கனா ரணாவத்திற்கு ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், கங்கனாவை டேக் செய்து பதிவிட்ட அந்த நபர், “பெண்கள் அதிகாரமடைவது பற்றிய உங்கள் ஆர்வம் ஊக்கமளிக்கிறது. அதனால் பில்கிஸ் பானு வாழ்கையை ஒரு அழுத்தமான திரைப்படமாக எடுக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?. இதை பில்கிஸ்பாவிற்காவோ, பெண்ணியத்திற்காகவோ அல்லது குறைந்த பட்சம் மனிதநேயத்திற்காகவாவது செய்வீர்களா” என குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு பதிலளித்த கங்கனா, “இந்தக் கதையை உருவாக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து மூன்று வருடம் உழைத்து, ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், அரசியல் ரீதியான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என வரையறை வைத்துள்ளோம் என பதிலளித்துவிட்டனர். மேலும் ஜியோ சினிமாஸ், நான் பிஜேபியை ஆதரிப்பதாக கூறி என்னுடன் பணிபுரிய மாட்டோம் என கூறினர். ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.