Skip to main content

"சின்னப் பசங்களா... யாருகிட்ட" - கமல் ரசிகர் எடுத்த கமல் படம்! 

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

2019 - ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமா உலகத்திற்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் அளித்தது 'பேட்ட - விஸ்வாசம்' இரண்டு படங்களும் ஒன்றாக வெளியான பொங்கல். ஒரே நாளில் வெளியான இந்த இரு படங்கள் பெற்ற வெற்றியை இப்போது வரை பிற படங்கள் பெறவில்லை. அதிலும் 'பேட்ட' ரஜினியை வைத்து ஒரு ரஜினி ரசிகர் எடுத்த படமாக இருந்தது. இடையில் சில வருடங்களாக ரஜினி ரசிகர்கள் மிஸ் பண்ணிய பல அம்சங்களை சேர்த்து கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விருந்தே படைத்திருந்தார். அதுபோல 2006 ஆம் ஆண்டு கமலை வைத்து ஒரு கமல் ரசிகர், ரசிகர்கள் விரும்பிய கமல்ஹாசனை சிறப்பாகத் திரையில் காட்டி ஒரு படத்தை உருவாக்கி அது பெரிய வெற்றியையும் பெற்றது. அந்தப் படம்தான் 'வேட்டையாடு விளையாடு'. அப்போது இளம் இயக்குனராக, நியூ வேவ் டைரக்டராக இருந்த கௌதம் மேனன் தான் அந்த கமல் ரசிகர்.

 

gowtham kamal



மின்னலே, காக்க காக்க என இரண்டு பெரிய வெற்றிகளை அதற்கு முன்பு கொடுத்திருந்த கௌதம் மேனன் காதல் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் பெயர் பெற்ற இயக்குனர். அப்பொழுதே சில பேட்டிகளில் தான் ஒரு கமல் ரசிகர் என்றும் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'சத்யா' என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்த பொழுது அதற்கு முன்பு சில ஆண்டுகள் ரசிகர்கள் மிஸ் பண்ணிய ஸ்டைலிஷான கமல்ஹாசனை தன் படத்தில் காட்டினார். வேட்டையாடு விளையாடு படத்தின் ஓப்பனிங் சீன் இன்றளவிலும் கமல்ஹாசனின் படங்களில் மிகச்சிறந்த ஓபனிங் சீனாகக் கருதப்படுகிறது.

"என் கண்ணு வேணும்னு கேட்டியாமே.." என்று தொடங்கி "கேட்ட மூடுறா" என்று கோபத்துடன் கமல் சொல்ல அங்கு தொடங்கும் சண்டைக்காட்சி அப்படியே கற்க கற்க பாடலுடன் தொடர்ந்து அப்படியே ஓப்பனிங் பாடலாக அமைந்தது கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. கமல் படங்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சிறந்த ஓபனிங் சீன்களில் அதுவும் ஒன்று.

 

 

kamal gethu



'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலின் கதாபாத்திரம் வீரமாகவும் அதேநேரம் பெண்களை மதிப்பதாகவும் ஸ்டைலான ஆங்கிலம் பேசுவதாகவும் என அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்கத்தக்கதாக செதுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் கமலின் உடைகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. கமலின் மேனரிசங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரசிகனால் ரசித்து ரசித்து உருவாக்கப்பட்டது. உச்சக்கட்டமாக "சின்னப் பசங்களா யார்கிட்ட" என்று கமல் கேட்பது அப்போதைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடுவது போல ஒரு கமல் ரசிகனால் அனுபவித்து எழுதப்பட்டது. காதல் காட்சிகளும் பாடல்களும் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் என்றும் மறக்க முடியாதவை.

இப்படி ஒரு கமல் ரசிகராக கௌதம் மேனன் தன் அபிமான நடிகரை வைத்து உருவாக்கிய திரைப்படம் ரசிகர்கள் பார்க்க விரும்பிய கமல்ஹாசனை திரையில் கொண்டு வந்தது. அதேநேரம் இப்படி ஒரு படத்தை எடுக்க ரசிகராக மட்டும் இருந்தால் போதாது என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

"கமல்ஹாசனின் பெரும் ரசிகன் நான். ஆனால், அவர் இப்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு துறையில் கால் பதித்துள்ளார். அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். அவரை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அவரை ஒரு நடிகராகத்தான் பார்க்க விரும்புகிறேன்" - இது சமீபத்தில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற கௌதம் மேனன் பேசியது. இதுவே  கமலின் நடிப்பை ரசிக்கும், நேசிக்கும் பெரும்பாலான ரசிகர்களின் ஆசையாகவும் இருக்கிறது.

  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

சல்மான் கான் நடிப்பில் ரீ மேக்காகும் அஜித் படம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

ajith yennai arindhal hindi remake with salman khan

 

கெளதம் மேனன் - அஜித் கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'என்னை அறிந்தால்'. ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, அருண் விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்த நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியிலும் கௌதம் மேனனே இயக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

இதற்கு முன்னதாக அஜித் நடித்த வீரம் படத்தை ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்தார் சல்மான் கான். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் சல்மான்கான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது. வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்றதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. 

 

கௌதம் மேனன், இதற்கு முன்னதாக அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை இந்தியில் ரிமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.