Skip to main content

பிக்பாஸ் சுஜா வருணிக்கு பிரியாணி போட்ட கமல்ஹாசன் 

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

 

கடந்த ஆண்டு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்து பிரபலமான சுஜா வருணியும்  சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கின்ற சிவகுமாரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் சமீபத்தில் திருமணம் கோலாகலமாக  சென்னையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் கமல்ஹாசன் கட்சிப்பணிகளின் காரணமாக கலந்துகொள்ளவில்லை. பின்னர் மணமக்கள் இருவரும் கமலை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமலை தன் தந்தையென அழைத்த சுஜா, அவரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்திருந்தார். இந்நிலையில் தற்போது மாறாக நடிகர் கமல்ஹாசன் சுஜா, சிவகுமார் தம்பதியினரை அழைத்து பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை சுஜா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அந்த குடிகாரனை வெட்டி எறிந்துவிட்டேன்' - பிரபல நடிகை புலம்பல் 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிக்பாஸ் மற்றும் நாகினி தொடரில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகை ஸ்வேதா திவாரி முதல் கணவர் ராஜா சவுத்திரியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன் இரண்டாவது கணவருடனும் தற்போது ஸ்வேதாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

 

sweta tiwari

 

 

அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்த நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... ''கணவரை பிரிந்த பிறகு தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு குடிகார விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த குடிகார விஷக்கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது குடிகார விஷக்கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படக்கூடாது'' என்றார்.

 

Next Story

பிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுத்தது சரியா? - மனநல மருத்துவர் ஷாலினி பதில்

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய இரண்டு சீசன்களிலும் கலந்துகொண்டவர்கள் அதற்கு பிறகு புது அடையாளங்களை பெருகின்ற அளவுக்கு பிக் பாஸ் அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருந்தது. அதேபோல், தற்போது நடந்துவரும் பிக் பாஸ் 3வது சீசன் முந்தைய சீசன்களைவிடவும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டுவருகிறது. இன்நிலையில் பிக் பாஸ் 3-யின் போட்டியாளர்கள் குறித்தும், அவர்களின் செயலுக்கான விளைவு குறித்தும் மனநல மருத்துவர் ஷாலினியுடன் நடந்த உரையாடலின் தொகுப்பு.

 

Dr.shalini about big boss

 

முந்தைய சீசன்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் படுக்கையறை, பெண்கள் படுக்கையறை என்று பிரித்துவைத்திருப்பார்கள். தற்போது அப்படி பிரிக்காமல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? இது ஒரு கலாச்சார சீர்கேடு இல்லையா?
 

இது கலாச்சார சீர்கேடு என்று சொல்லமுடியாது. எப்போதும் கலாச்சாரம் சிறப்பான நிலையில் இருந்ததாக நான் நம்பவில்லை. அது தொடந்து சீர்கேட்டில்தான் இருக்கிறது. சீர்கேடுகளும் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் இறங்கவேண்டுமா? வியூவர் ஷிப்பை அதிகப்படுத்துவதாக நினைத்து அதை செய்கிறார்கள். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கப்போவதில்லை. ஆனால், இது பேசுபொருளாக மாறும் என்பதற்காக ஒரே அறையை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு அல்பத்தனமாக செய்திருக்கவேண்டாம் என்று தோன்றுகிறது.
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எல்லோரும் நடிகர்கள். அவர்களுக்கு கேமரா இருப்பது தெரியும். ஆனால், கமல் கூறும்போது, அவர்கள் கேமரா இருப்பதை மறந்துவருகிறார்கள் என்கிறார். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? 
 

கண்டிப்பாக கேமரா இருப்பதை அவர்களால் மறக்கமுடியாது. வெளியில் வந்தபிறகும் எல்லா இடங்களிலும் கேமரா இருப்பதாகவே அவர்கள் பயப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்க நாங்கள் நிறைய போராடவேண்டியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி அதில் பங்கேற்பவர்களுக்கு மனதளவில் மிகுந்த பாதிப்புகளைக் கொடுக்கிறது. அது கமலுக்கும் தெரிந்திருக்கும். இருந்தும் அவரது சுயலாபத்திற்காக பொய் சொல்கிறார். 
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் ஆடைகள் குறித்தும் பல சர்ச்சைகள் எழுகின்றன. அப்படி உடை அணிவது அவர்களின் உரிமை, சமத்துவம் என்று எடுத்துக்கொள்ளலாமா? 
 

சிலருக்கு ‘எக்ஸ்டாப்லிஷ் டெண்டன்சி’எனப்படும்  என்னைப்பார், என் அழகைப்பார் என்று தன்னை அதிகமாக வெளிக்காட்டிக்கொள்ளும் மன நோய் இருக்கும். இந்த நோய் இருக்கும் ஆண்கள் பெண்களின் முன் தன் ஆடைகளை கழற்றிவிட்டு என்னைப்பார்த்தாயா நான் எவ்வளவு பெரிய ஆண் என்று கேட்பார்கள். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, ஆபாசமாக உடையணியும் பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களுக்கு எல்லோரும் இதைப் பார்க்கிறார்கள், இதனால் என்ன விளைவு நடக்கும் என்று தெரியும், அந்த விளைவை தூண்டுவதற்காகவே அவர்கள் இப்படி உடையணிகிறார்கள். 
 

மதுமிதா நான் தமிழ் பெண், எனக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று கூறும்போது, “தமிழ்பொண்ணா இருந்தா ஏன் நடிக்கவர”என்று கேட்கிறார்கள். இது சரிதான?
 

ஏன் தமிழ்பெண் நடிக்க கூடாதா? அவர்களுக்கு நடிப்பு வராதா? சினிமா என்றால் வேறெதற்காகவோ என்று நினைத்துக்கொண்டு அவர்கள் அப்படி பேசியிருக்கிறார்கள். அதற்கு சினிமா காரர்கள்தான் எங்களை எப்படி இழிவாக பேசலாம் என்று சண்டைப்போட வேண்டும். நான் ரொம்ப பெரிய பணக்காரன் என்பதற்காக ஒரு ஆண் நிறைய நகைகளை போட்டுக்கொண்டு வந்தால், உன்கிட்ட பணம் இருந்தால் அதை இப்படி காட்டிகொள்ளவேண்டுமா என்று கேட்பார்களோ, அப்படித்தான் நான் ஒரு பேரழகி, மிக வனப்பான உடலைக் கொண்டவள் என்று காட்டிக்கொள்வதும் சீப்பான விஷயம் தானே. எல்லா பெண்களிடமும் இருப்பது தானே இவர்களிடமும் இருக்கிறது, அதைப்போய் அல்பமாக வெளிப்படுத்தவேண்டுமா?