/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/21_78.jpg)
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் 'அநீதி'. இப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காளி வெங்கட் நடிப்பை பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் நன்றி தெரிவித்து காளி வெங்கட் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "தங்கப்பிள்ளை கதாபாத்திரத்தை பயங்கரமாக திக்குமுக்கு ஆடுற அளவிற்கு எல்லாரும் கொண்டாடுறீங்க. அதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் சாருக்கும், ஷங்கர் சாருக்கும் நன்றி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பேராதரவு. எல்லா படங்களுக்கும் கொடுப்பது மாதிரி தான். ஆனால் இந்த படத்துக்கு பல மடங்கு அதிகமாக கொடுத்துருக்கீங்க. சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரின் விமர்சனத்தை படிக்கும் போது மற்றும் ஃபோனில் அழைத்து பேசியவர்களின் உணர்வையும் கேட்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன திருப்பி கொடுக்கிறது என்று தெரியவில்லை" எனக்குறிப்பிட்டுள்ளார்.
#Aneethi#Thangapulla#அநீதி#தங்கப்பிள்ளpic.twitter.com/gX1DOxPwdd
— Kaali Venkat (@kaaliactor) September 27, 2023
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)