Skip to main content

"எம்.ஜி.ஆர்-க்கும் தேவருக்கும் ஜிம்மில் நட்பு ஏற்பட்டது இப்படித்தான்" - கலைஞானம் பகிரும் நினைவுகள்! 

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

mgr

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆர் மற்றும் சாண்டோ சின்னப்பத்தேவருக்கு இடையேயான நட்பு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய வள்ளல் என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால்,  சாண்டோ சின்னப்பத்தேவர் எவ்வளவு தர்மம் செய்திருக்கிறார் என்று பலருக்கும் தெரியாது. அவர் கோயிலுக்கு மட்டும்தான் தர்மம் செய்தார் என்று நினைக்கிறார்கள். கோயிலுக்கு அவர் நிறைய தர்மம் பண்ணியிருக்கிறார். ஆனால், அது மட்டும் செய்யவில்லை. நானே இல்லாதவர்கள் பலருக்கு அவரிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறேன். 

 

எம்.ஜி.ஆர் ஜுப்பிட்டர்ல வேலைக்குச் சேர்ந்த போது மாதச் சம்பளம் கிடையாது. நடித்தால் மட்டும்தான் அவருக்குச் சம்பளம். ஆனால், தேவருக்கு மாதச் சம்பளம் உண்டு. எம்.ஜி.ஆருக்கு பெரிய கேரக்டர்தான் குடுப்பாங்க. தேவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி. பின்னாட்களில் தேவரும் பெரிய கேரக்டர் எல்லாம் பண்ணாரு. தேவர் பார்க்கவே நல்ல பெரிய பயில்வான் மாதிரி இருப்பார். எப்பவும் பணியனோடதான் இருப்பார். நிறைய வேஷம் கிடைக்கும்னு நல்ல உடற்பயிற்சி செய்து உடம்ப நல்லா வச்சிருந்தார். எம்.ஜி.ஆர் தேவரை அண்ணானு கூப்பிடுவார். தேவர் எம்.ஜி.ஆரை முருகானு கூப்பிடுவார். 

 

kalaignanam

 

ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரும் அவர் அண்ணன் சக்கரபாணியும் நாடகங்களில் நடிக்க சேர்ந்தே போவார்கள். எம்.ஜி.ஆருக்கு 15 வயது இருக்கும் போது கந்தசாமி முதலியார் கம்பெனில நடிக்க வாய்ப்பு கேட்டு போனாங்க. அவர் அண்ணன் சக்கரபாணி நல்லா உடம்பு வச்சிருப்பார். ஆனால், எம்.ஜி.ஆர். ரொம்ப ஒல்லியாக இருப்பார்... மீசை கூட இருக்காது. சக்கரபாணிக்கு உடனே வாய்ப்பு கிடைச்சிருச்சு. எம்.ஜி.ஆர். ஒல்லியா இருந்ததால் ஊருக்குப் போய் நல்ல உடம்ப தேத்திட்டுவானு சொல்லிட்டாங்க. நாங்க எங்க போனாலும் சேர்ந்தே இருக்கணும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க என்று கூறி சக்கரபாணி சேர மறுத்துவிட்டார். பிறகு அந்தக் கம்பனிலேயே ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க. இருந்தாலும், ஒல்லியா இருக்கிறதா சொல்லி முதல்ல வேண்டாம்னு சொன்னது எம்.ஜி.ஆருக்கு உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்தது. நம்ம உடம்ப எப்படியாவது தேத்தணும்னு நினைக்கையிலதான் தேவரோட அறிமுகம் கிடைச்சது. நானும் உங்களோட சேர்ந்து ஜிம்முக்கு வரலாமான்னு கேட்க, தேவரும் சரி வாங்கன்னு சொல்லிட்டார். கோயம்புத்தூர்ல உள்ள மாருதி ஜிம்முலதான் இருவருக்கும் இடையேயான நட்பு வளர ஆரம்பித்து, நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.