Skip to main content

காஜல் அகர்வாலின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

kajal aggarwal

 

நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். 

 

'ஹே சினாமிகா', ‘இந்தியன் 2' உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ள காஜல் அகர்வால், தற்போது பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி', ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில், காஜல் அகர்வாலுடன் இணைந்து யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, மயில்சாமி, ஊர்வசி, சத்யன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ‘கோஸ்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியன் 2' படப்பிடிப்பில் கமல் - வெளியான வீடியோ

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Kamal on the sets of Indian 2

 

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நடைபெறும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார்.     

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஷங்கருடன் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனிடையே காஜல் அகர்வால் தனது சமூக வலைதளபக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக குதிரையுடன் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

Next Story

"இனிமையான மனிதர்" - கமலை புகழ்ந்த அமெரிக்க நடிகை

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

indian 2 - american actress mckenzie westmore praised kamalhaasan

 


'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்த நிலையில், சில பிரச்சனைகளால் தடைப்பட்டுப் போனது. இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் 'இந்தியன் 2' படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் படம் தொடர்பாக பிரபல ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார். மைக்கேல் வெஸ்ட்மோர், கமலின் 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' உள்ளிட்ட படங்களில் ஒப்பனை கலைஞராக பணியாற்றியவர். இந்த படங்களை தொடர்ந்து தற்போது 'இந்தியன் 2' படத்திலும் பணியாற்றவுள்ளார். அப்போது மைக்கேல் வெஸ்ட்மோரின் மகள் மெக்கென்சி வெஸ்ட்மோர் உடன் இருந்தார். 

 

அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மெக்கென்சி வெஸ்ட்மோர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "உலகில் உள்ள இரண்டு இனிமையான மனிதர்களுடன் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவர் எனது அப்பா, மற்றொருவர் கமல்ஹாசன் (அவரும் குடும்பத்தில் ஒருவர்). நீங்கள் இதுவரை பார்க்கவில்லை எனில், கமலின் புதிய படமான விக்ரம் படத்தை பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.