sasasasas

Advertisment

கரோனாவால் ஓடிடி வெளியீட்டுக்கான படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இதனால் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹாரர் படமாக உருவாகியுள்ள இதில் காஜல் அகர்வால் பேயாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் பேசும்போது,

"சமீப காலமாக வெப் தொடர்களின்ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர், நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நானும் வெப் தொடரில் நடிக்கிறேன். இது 10 தொடர்களாக வெளிவரும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவிட்டேன். சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருக்கிறேன்'' என்றார்.