Next Story
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சமூக வலைதள மீம்ஸ்களின் மூலமாக தமிழச்சி என்று வெகுவாக வைரலானவர் ஜூலி. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு, பிரபலமடைந்தார்.
பிக்பாஸை அடுத்து அனிதா எம்.பி.பி.எஸ்., அம்மன் தாய் மற்றும் மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படங்கள் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஜூலிக்கு சமூக வலைதளத்தில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஒரு ரசிகர் ஜூலியின் புகைப்படத்தை, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Next Story
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒருசில திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கிடையே தான் செய்து வந்து நர்ஸ் வேலையைச் சில காலம் நிறுத்திவைத்திருந்த ஜூலி தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா தொற்று காரணாமாக மீண்டும் அந்த வேலையைக் கையிலெடுத்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனா வார்டில் சிகிச்சை அளிக்க பயிற்சியை முடித்துள்ளதாகவும், விரைவில் அவர் தனது புனிதமான நர்ஸிங் சேவைக்குத் திரும்ப உள்ளதாகவும் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜூலியின் இந்தப் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.