Skip to main content

"இங்கு அவர் எப்படியோ, அங்கும் அவர் அப்படித்தான்" -  நடிகர் ஜெயப்பிரகாஷ்

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
zcsvs

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியபோது.... 

 

“இந்த இசை வெளியீட்டு விழாவில் தனஞ்செயன் சார் எப்படி அனைத்து பணிகளையும் செய்கிறாரோ, படப்பிடிப்பிலும் அப்படித்தான் இருப்பார். அனைத்து பணியிலும் அவருடைய ஈடுபாடு இருக்கும். பொதுவாக தயாரிப்பாளர்கள் அலுவலகத்தில்தான் இருப்பார்கள் படப்பிடிப்பு தானாக நடக்கும். ஆனால், தனஞ்செயன் சார் அனைத்திலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதோடு நமக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த படம் குறித்து இயக்குநர் பிரதீப் என்னிடம் பேசும்போது, என்னை சந்திக்க எனது வீட்டுக்கே வந்தார். பொதுவாக இயக்குநர்கள் அப்படி வர மாட்டார்கள். அலுவலகம் அல்லது பொது இடங்களில் தான் சந்திப்பார்கள். 

 

ஆனால், பிரதீப் எந்தவித ஈகோவும் இல்லாமல் என்னை தேடி என் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். இயக்குநரின் அந்த நடவடிக்கையே எனக்கு படத்தின் மீது ஈடுபாட்டை கொடுத்து விட்டது. படம் முழுவதும் நான் மகிழ்ச்சியாக பணிபுரிந்திருக்கிறேன். பிரதீப்பிடம் படம் தொடர்பாக அனைத்துவிதமான ஆலோசனையிலும் ஈடுபடுவேன். என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நமது கருத்துக்கும் யோசனைக்கும் அவர் செவி கொடுப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் நான் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரொம்ப பிஸியாக நடித்த படம் இது தான். ஹீரோ சிபி சாருடன் தான் என் கதாப்பாத்திரம் பயணிக்கும். அவருக்கும் எனக்கும் இடையே ஒரு பிக்‌ஷன் இருந்துக் கொண்டே இருக்கும். மொத்தத்தில் நான் முழு திருப்தியுடன் நடித்த படம். இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாஸ்டர் படம் கொடுத்த தைரியம் தான் இதற்கு காரணம்" -  தயாரிப்பாளர் டி.சிவா

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
hsfhsrh

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசியபோது.... 

 

 “சினிமா என்னாகுமோ, ஏதாகுமோ, திரையரங்குகள் திறக்கப்படுமா, மக்கள் கூட்டம் வருமா, என்ற கேள்விகள் 10 நாட்களுக்கு முன்பு இருந்து. ஆனால், மாஸ்டர் என்ற படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் தான் இப்போது சினிமாத்துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அந்த படம் கொடுத்த தைரியம் தான் இன்று 'கபடதாரி' ரிலீஸ் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கரோனா காலக்கட்டத்தில் தனது சம்பளம் 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, அதை செயல்படுத்திய முதல் ஹீரோ விஜய் ஆண்டனி சார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிபியும் இந்த படத்திற்காக அதை செய்திருக்கிறார். தனஞ்செயன் சார் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர். அதனால்தான் இத்தனை வருடங்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 

 

அவருக்கு சினிமா மீது மிகப்பெரிய பேஷன். பணம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும். ஆனால் அவற்றில் செல்லாமல் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த நேரத்தில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தரும். சிபி இந்த படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார். இயக்குநர் பிரதீப் இந்த படம் மூலம் பெரிய வெற்றி பெற வேண்டும். சிபி நல்ல நடிகர். மிகப்பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் அதை காண்பித்துக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சினிமா கஷ்டமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு
வருகிறது. இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக விமர்சனத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செய்யாமல், விமர்சனமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

Next Story

"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
vgdsgdasg

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியபோது.... 

 

“தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய் நட்சத்திரத்தின் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார். இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார், அதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள். எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும். அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவர் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி.

 

படத்தின் இரண்டாவது ஹீரோ ஜே.எஸ்.கே சார். அவரை ரொம்ப ரசிப்பேன். அக்னி சிறகுகள் படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர். ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும். பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.