jayam ravi omitted vijay political entry question

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களைக்கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதில் சைரன் படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்க ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அடுத்தடுத்த படங்களைப் பற்றி சொன்னார். மேலும் மணிரத்னம் - கமலின் தக் லைஃப் படம் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத்தெரிவித்தார் பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயம் ரவி, “கோயிலில் இருக்கேன். என் படத்தை பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்” எனச் சொல்லிவிட்டு சென்றார்.