/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/179_25.jpg)
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில், யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்ததாக படக்குழு தரப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஜெயம் ரவி, படத்தில் பணியாற்றியது அருமையாக இருந்ததாக கூறி படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். இப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத்தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)