Skip to main content

பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிய ஜெயம் ரவி

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Jayam Ravi gave priority to women in Kadhalikka Neramillai movie

 

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. படு தோல்வியை படம் சந்தித்தது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் சைரன் படம் டிசம்பரில் ரிலீஸாகவுள்ளது. 

 

இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்துள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கவனம் ஈர்க்கும் ‘மக்காமிஷி’

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
jayam ravi brother first single released

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராஜேஷ்.எம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது அவர், இயக்கி வரும் படம் பிரதர். இதில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் பூமிகா, விடிவி கணேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்கிரீன் சீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு  செப்டம்பரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பாடலின் உரிமையை ‘திங் மியூசிக்’ ஆடியோ வாங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ‘ஜீ தமிழ்’ நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ‘மக்காமிஷி’ என்ற பாடல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘வாட் இஸ் மக்காமிஷி?’ என்ற போஸ்டரை பகிர்ந்திருந்தார். இதையடுத்து இப்பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா என்பவர் எழுதி பாடியுள்ளார். ஜாலியான மோடில் இப்பாடல் அமைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ‘ஹசிலி ஃபிசிலி...’, ‘நாணி கோணி...’ என்று கவனம் ஈர்க்கும் பாடல் வரிகள் இடம்பெற்றது. அந்த வரிசையில் இந்த ‘மக்காமிஷி’ பாடலும் அமைந்துள்ளது.

Next Story

கேள்வி கேட்டு போஸ்டரை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
harris jayaraj announced brother movie song

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்.எம், தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். தற்போது அவர், ஜெயம் ரவியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்க மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரதர் (Brother)’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில், பூமிகா, விடிவி கணேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தின் பாடலை ‘திங் மியூசிக்’ ஆடியோ உரிமையை வாங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், திருமண வரவேற்பில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சேர்ந்து பாடலை பாடி கொண்டாடி வருவது போல் இடம்பெற்றியிருந்தது. சில நொடிகளில் மட்டுமே வரும் அந்த ஹம்மிங் ரசிகர்களை முனுமுனுக்க செய்தது.

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் இப்படத்தில் ‘மக்காமிஷி’ எனத் தலைப்பில் தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘வாட் இஸ் மக்காமிஷி?’ என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்.