Skip to main content

சூடுபிடிக்கும் அட்லீ பட வியாபாரம்; ஆச்சரியத்தில் திரையுலகம்

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

Jawan movie sold Netflix for Rs 120 crores

 

விஜய்யை வைத்து தொடர் ஹிட்  படங்களை கொடுத்த அட்லீ தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு எந்த படமும் வெளியாகவில்லை. ஆனாலும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ஜவான் படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

ரிஹானா கலை நிகழ்ச்சியும் ஷாருக்கானின் டான்ஸும் - வைரலாகும் வீடியோ

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
rihanna sharukhan anandh ambani wedding dance video

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது. குஜராத் ஜாம் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார். 

இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இரவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களோடு நடனமாடினார். ஜான்வி கபூருடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் ஆடிய வீடியோவும் வைராகி வருகிறது.  

பாப் பாடகி ரிஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.