Skip to main content

சிம்பு படத்தில் இணையும் பாலிவுட் நடிகைகள் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
janhvi kapoor and kiara advani to act in str 48

சிம்பு தற்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு முன்பாக கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அப்படம் சிம்புவின் 48வது படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. 

இப்படத்திற்காக சிம்பு வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே கடந்த சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து போஸ்டரை வெளியிட்டது. அதில் சிம்பு இரண்டு கெட்டப்பில் தோன்றியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

janhvi kapoor and kiara advani to act in str 48

இப்படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பின்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியின. இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு நடிகைகளுக்குமே இந்தப் படம் கோலிவுட்டின் அறிமுகம படமாக இருக்கும் எனத் தெரிகிறது.   

சார்ந்த செய்திகள்