Skip to main content

ஜேம்ஸ் பாண்ட் 25 வது படத்தின் பெயர் இதுதான்... ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

ஜேம்ஸ் பாண்ட் தொடரின் அடுத்த படத்தின் பெயர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
 

daniel craig

 

 

பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த தொடரில் இதுவரை 24 படம் வந்துள்ளது. அதில் தற்போது உருவாகி வரும் படம் இந்த தொடரின் 25வது படமாகும். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் அந்த ஸ்பை கதாபாத்திரங்களும், வித்தியாசமான தொழில்நுட்பங்களும் மிகவும் பெரிதாக பேசப்பட்டன. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் ரசிககர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக தமிழகத்திலும் ஜேம்ஸ் பாண்ட் தொடருக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். 
 

கடந்த 1962ஆம் ஆண்டு டாக்டர் நோ என்ற பெயரில் முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் 007 தொடர் வெளியானது. கடந்த 2015ல் கடைசியாக இத்தொடரில் வெளியான படம் ஸ்பெக்டர். இதில் டேனியல் கிரேக் பாண்டாக நடித்திருந்தார்.
 

இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் 25-வது படத்திற்கு 'நோ டைம் டூ டை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல்கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கிறார்.
 

இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடித்து வரும் படத்தை சேர்த்து மொத்தம் ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டேனியல் கிரேக் நடித்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நரேந்திர மோடி 007 - ஜேம்ஸ் பாண்டோடு ஒப்பிட்டு கிண்டல் செய்த திரிணாமூல் காங்கிரஸ்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

pm modi as james bond

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முதலாக பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2019 தேர்தலில் மீண்டும் வென்று இரண்டாவது முறையாக பிரதமரானார். இதன்மூலம் தொடர்ந்து 7வது வருடமாக மோடி, இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்துவருகிறார்.

 

மோடி, பிரதமர் பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளதை பாஜக தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ்,  திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையான ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

 

இந்தநிலையில், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.யான டெரெக் ஓ பிரையன், பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்ட் போல் சித்தரிக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோட் - சூட்டுடன் ஜேம்ஸ் பாண்ட் போல பிரதமர் மோடி சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் ‘they call me 007’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

 

மேலும் அந்தப் படத்தில், 007 என்பது 0 முன்னேற்றம், 0 பொருளாதார வளர்ச்சி, 7 ஆண்டுகளாக இருக்கும் தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றைக் குறிப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

Next Story

முதல் 'ஜேம்ஸ் பாண்ட்' ஷான் கானரி ஏன் இறந்தார்? -வெளியான காரணம்...

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
shan connery

 

 

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இப்புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கும், ரசிகர்களிடையே புகழ் பெற்றுவிடுவார்கள். அந்தளவிற்கு சிறப்பான இந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடித்தவர் ஷான் கானரி. மேலும் இவர் 1962 முதல் 1983 வரை ஏழு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.

 

புகழ்பெற்ற நடிகரான ஷான்  கானரி,  கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, அவரது இல்லத்தில் காலமானார். 90 வயதான அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. இதனைத்தொடர்ந்து உலகமெங்கிலும் உள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள், சமூகவலைதளங்கள் மூலமாக தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

 

இந்தநிலையில், ஷான் கானேரியின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியாகிவுள்ளது. அதில் ஷான் கானரி, நிமோனியாவாலும், இருதய செயலிழப்பு காரணமாகவும் மரணமடைந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இருதய செயலிழப்பு, வயது முதிர்வினால் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.